Posts

En veettu chella prani, en malligai chedi

ஆமாங்க! சொன்னா நம்பவே மாட்டீங்க!  சரி! நான் முதலிலிருந்து வர்றேன்.  எனக்கு பூச்செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும்.  எப்பவுமே என் பொண்ணுங்ககிட்ட சொல்லிகிட்டே இருப்பேன்.   வீட்டுமுன்னாடி பல வண்ண பூச்செடிகள் நுழைவாயிலுக்கு  இரு புறமும் இருக்க வேண்டும்.  வீட்ல திண்ணை இருக்கணும்.  ஊஞ்சல் இருக்கணும்.  இதெல்ல இப்போதைக்கு எங்கள் வீட்டில் இல்லை.  ஒரே ஒரு அடுக்கு மல்லி செடியும், ஒரு நித்திய மல்லி கொடியும் தான் இருக்கு.  நான் முதலி ல் சொன்னது இந்த செல்ல குட்டிகளை பற்றித்தான்.  இவை என் தங்கை வாங்கி வந்து கொடுத்தவை.  வீட்டில் வைத்து 6 மாதத்திற்கு மேலாகியும் ஒரு பூ கூட போக்கவே இல்ல.  என் தங்கை வீட்டில் 2 மாதத்திலேயே பூக்க ஆரம்பிச்சிடுச்சாம்.  அப்ப ஒரு நாள், அவங்க கிட்ட போய், "இங்க பாருங்க! உங்க ரெண்டு பேருக்கும் 15 நாள்தான் அவகாசம் கொடுப்பேன்.  ஒழுங்கா பூ வைக்கணும்.  இல்லைனா 16 வது நாள் ரெண்டுபேரும் ரோட்ல பொய் மல்லாக்க படுத்து வானத்த பாக்க வேண்டியது தான்!" அப்படினு சொன்னேன்.  தினமும் தண்ணீர் ஊற்றும் போது கவனித்தேன...

Aanile oru Pen, Avan En Magan

எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை.  எனக்கு மகிழ்ச்சி, ஆனால் என் கணவரும் மாமியாரும் ஆண் பிள்ளை பிறக்கவில்லையே என்று வருந்தினார்கள்.  எனக்கு இரண்டாவது பிறந்ததும் பெண் குழந்தையே!  என் கணவரும் மாமியாரும் அழுது புரண்டார்கள்.  கடவுளையே சபித்தார்கள்.  என் கணவர் குழந்தையை அருகில் கூட வந்து பார்க்கவில்லை.  வாரிசு இல்லாம போச்சே என்று இன்றுவரை புலம்பி கொண்டுதான் இருக்கிறார்கள்.  நான் கூட ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று எண்ணினேன்.  வாரிசுக்காக  அல்ல.  இப்ப பெண்கள் எப்படி ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் அல்லது ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஒதுக்கி வைத்திருந்த எல்லா துறைகளிலும் நுழைந்து எல்லா வேலைகளிலும் கலக்கி கொண்டிருக்கிறார்களோ அதே போல் என் ஆண் பிள்ளைக்கு, இன்றும் பெண்களுக்க மட்டும் என்று ஒதுக்கியுள்ள வீடு பெருக்குதல், வாசல் தெளித்து மாக்கோலம் போடுதல், பூ தொடுதல், மற்றும் இன்ன பிற வேலைகளிலும் தலை சிறந்தவனாக அதோடு பெண்ணியத்தையும் பெண்களையும் மதித்து போற்றும் சிறந்தவனாக வளர்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன்.  ஆனால், இறைவன் ...