En veettu chella prani, en malligai chedi

ஆமாங்க! சொன்னா நம்பவே மாட்டீங்க!  சரி! நான் முதலிலிருந்து வர்றேன்.  எனக்கு பூச்செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும்.  எப்பவுமே என் பொண்ணுங்ககிட்ட சொல்லிகிட்டே இருப்பேன்.   வீட்டுமுன்னாடி பல வண்ண பூச்செடிகள் நுழைவாயிலுக்கு  இரு புறமும் இருக்க வேண்டும்.  வீட்ல திண்ணை இருக்கணும்.  ஊஞ்சல் இருக்கணும்.  இதெல்ல இப்போதைக்கு எங்கள் வீட்டில் இல்லை.  ஒரே ஒரு அடுக்கு மல்லி செடியும், ஒரு நித்திய மல்லி கொடியும் தான் இருக்கு.  நான் முதலி ல் சொன்னது இந்த செல்ல குட்டிகளை பற்றித்தான்.  இவை என் தங்கை வாங்கி வந்து கொடுத்தவை.  வீட்டில் வைத்து 6 மாதத்திற்கு மேலாகியும் ஒரு பூ கூட போக்கவே இல்ல.  என் தங்கை வீட்டில் 2 மாதத்திலேயே பூக்க ஆரம்பிச்சிடுச்சாம்.  அப்ப ஒரு நாள், அவங்க கிட்ட போய், "இங்க பாருங்க! உங்க ரெண்டு பேருக்கும் 15 நாள்தான் அவகாசம் கொடுப்பேன்.  ஒழுங்கா பூ வைக்கணும்.  இல்லைனா 16 வது நாள் ரெண்டுபேரும் ரோட்ல பொய் மல்லாக்க படுத்து வானத்த பாக்க வேண்டியது தான்!" அப்படினு சொன்னேன்.  தினமும் தண்ணீர் ஊற்றும் போது கவனித்தேன்! மொட்டு வரவேயில்லை! ரொம்ப கவலையா, அழுகையே வந்தது.  ஆனால் நீங்க நம்பவே மாட்டேங்க!  இந்த ரெண்டு திருட்டுக்கொட்டும் பேசி வெச்சி  சரியாய் 15வது நாள் ரெண்டு பேரும் மொட்டு வைச்சாங்க. எனக்கு உண்மையாகவே ஆனந்தமும் ஆச்சரியம்யம் தாங்கவே முடியல.  சின்ன பிள்ளைங்க செய்றமாதிரி எப்படி கடைசி நாளில் ஆச்சரிய படுத்திட்டாங்க.  இப்ப ஒரு முழம் மல்லி பூக்கிறாள் தினமும்.  எங்கள் வீட்டு PET, என் மல்லி செடின்னு சொன்னா அது தப்புங்களா! 

Comments