Aanile oru Pen, Avan En Magan

எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை.  எனக்கு மகிழ்ச்சி, ஆனால் என் கணவரும் மாமியாரும் ஆண் பிள்ளை பிறக்கவில்லையே என்று வருந்தினார்கள்.  எனக்கு இரண்டாவது பிறந்ததும் பெண் குழந்தையே!  என் கணவரும் மாமியாரும் அழுது புரண்டார்கள்.  கடவுளையே சபித்தார்கள்.  என் கணவர் குழந்தையை அருகில் கூட வந்து பார்க்கவில்லை.  வாரிசு இல்லாம போச்சே என்று இன்றுவரை புலம்பி கொண்டுதான் இருக்கிறார்கள்.  நான் கூட ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று எண்ணினேன்.  வாரிசுக்காக  அல்ல.  இப்ப பெண்கள் எப்படி ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் அல்லது ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஒதுக்கி வைத்திருந்த எல்லா துறைகளிலும் நுழைந்து எல்லா வேலைகளிலும் கலக்கி கொண்டிருக்கிறார்களோ அதே போல் என் ஆண் பிள்ளைக்கு, இன்றும் பெண்களுக்க மட்டும் என்று ஒதுக்கியுள்ள வீடு பெருக்குதல், வாசல் தெளித்து மாக்கோலம் போடுதல், பூ தொடுதல், மற்றும் இன்ன பிற வேலைகளிலும் தலை சிறந்தவனாக அதோடு பெண்ணியத்தையும் பெண்களையும் மதித்து போற்றும் சிறந்தவனாக வளர்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன்.  ஆனால், இறைவன் கொடுத்த வரம் என் இரண்டு மகள்கள்.  இனி அவர்கள் எதிர்காலமே என் எதிர்காலம்! அவர்கள் வாழ்வே என் வாழ்வு!

Comments